ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை. ஒலிம்பிக் ஓர் பார்வை: ஒரு விளையாட்டு வீரருக்கு ஒலிம்பிக் போட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகள் என்றால் ஒலிம்பிக்தான். உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே வீரர்களின் லட்சியம். ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 33 விளையாட்டுகளுக்கு 339 பதக்கங்கள் […]
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி,6-வீரர், வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல விமானக் கட்டணமாக தலா ரூபாய் 30-ஆயிரம் வழங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு. 24-வது கோடைகால காதுகேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பிரேசில் செல்லும் தமிழகத்தை சேர்ந்த 6-வீரர், வீராங்கனைகளுக்கு விமானக் கட்டணமாக தலா ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள்: “பிரேசில் நாட்டில் வருகிற மே மாதம் […]
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்ப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 8 ம் தேதி முடிவடைந்தது. இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு மொத்தம் 7 பதக்கங்களை வென்றனர். இதில் சோப்ரா தங்கம் வென்றார், மீராபாய் சானு மற்றும் ரவி தஹியா வெள்ளி, பிவி சிந்து, பஜ்ரங் புனியா, லவ்லினா மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கங்களை […]
ஹாக்கி அணி வீரர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் போன் கால் வந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று இந்தியா ஜெர்மனியை […]
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய ஆடவர் அணிக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடைபெற்று வரக்கூடிய ஒலிம்பிக் போட்டியில் இன்று ஆடவர் ஹாக்கி வெண்கலப்பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், ஜெர்மனியை 5:4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி முதல் வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் ஆடவர் ஹாக்கி அணிக்கு பல்வேறு பிரபலங்கள் […]
ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணி ஜெர்மனியை 5-4 என கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி பிரிட்டன் காலிறுதி போட்டியில் பிரிட்டன் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தியது. 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதனையடுத்து,ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அரையிறுதி தொடரில் பெல்ஜியம் அணியிடம் 5:2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோற்றதால்,வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்,இன்று […]
தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளுடன் இன்று மாலை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர், வீராங்கனைகளான ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர், ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோருடன் இன்று மாலை காணொலி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்.
ஒலிம்பிக் போட்டியில் சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் பா.நாகநாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை மாநகர ஆயுதப்படை காவலர் பா.நாகநாதன். இவர் தடகள வீரராக பல பதக்கங்களை வென்றுள்ளார். அனைத்திந்திய காவல் பணித்திறனாய்வு தொடர் ஓட்ட போட்டியில் கடந்த 2019 ஆம் ஆண்டு கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார். மேலும், கடந்த மார்ச் மாதம் ஒலிம்பிக் தகுதி தேர்வு போட்டியில் நாகநாதன் கலந்து கொண்டு 4*400 மீ தொடர் […]
ஒலிம்பிக்கில் பதக்கம் பெரும் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை கடந்த இரண்டு மாதங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி நிலையில்,தற்போது குறைந்து வருகிறது.எனினும்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,கொரோனா பரவலை கட்டுப்படுத்த சிறப்பு முகாம்கள் அமைத்து,18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்,விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமை நேரு விளையாட்டரங்கில் முதல்வர் ஸ்டாலின் இன்று […]
கொரோனா வைரஸ் இன்னும் பரவிவரும் சூழ்நிலையிலும் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், டோக்கியோவின் 61 சதவீத மக்கள் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட வேண்டும் என்றுதான் கூறியுள்ளனராம். கடந்த ஒரு வருட காலமாக உலகையே புரட்டிப் போட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்போது புதியதாக மீண்டுமொரு கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரு வருட காலமாக பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பழைய […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல நாடுகளில் பல போட்டிகளை ரத்து செய்தனர். இந்நிலையில், ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுமாறு அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் கோரிக்கையை முன்வைத்திருந்தது. இந்நிலையில், கனடாவில் நாளுக்குநாள் கொரோன பாதிப்பு அதிகரித்து வரும் காரணத்தால், வீரர்களின் பாதுகாப்பு கருதி, ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து விலகுவதாக கனடா ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்திருந்தது.
வருகின்ற 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.இந்த ஒலிம்பிக் போட்டிக்காக ஜப்பான் நாட்டு வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 2020-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் புதிய போட்டிகளை ஜப்பான் அறிமுகம் செய்ய உள்ளது.அதில் பேஸ்பால் ,மலையேற்றம் ,கராத்தே ,அலைச்சறுக்கு ,ஸ்கேட் போர்டிங் ஆகிய விளையாட்டுகள் ஒலிம்பிக் போட்டியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். ஜப்பானில் உள்ள ஷோனான் கிராமத்தில் தான் இந்த அலைச்சறுக்கு விளையாட்டு தோன்றியது.ஜப்பானில் தோன்றிய […]