ஜப்பான் டோக்கியோவில் ஜூலை 24-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திட்டமிட்டு இருந்தது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியதால் ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த நாட்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டியை ஒரு வருடத்திற்கு பிறகு தள்ளி வைப்பதாக அதிகாரபூர்வமாக கூறியது. இதற்கு மறு தேதி ஏதும் குறிப்பிடப்படவில்லை. […]