டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த விருப்பம் தெரிவித்து அக்.1ல் கடிதம் எழுதியதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த காலங்களில் பலமுறை கூறியிருந்தார். அந்த வகையில், மும்பையில் நடைபெற்ற […]
ஒலிம்பிக் : டோக்கியோ, ரியோ, பாரிஸ், சொச்சி போன்ற இடங்களில் 4 வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் இந்த ஒலிம்பிக் தொடரில் பல உலகநாடுகளும், பல வீரர், வீராங்கனைகளும் கலந்து கொண்டு விளையாடி பதக்கங்களை வென்று தங்களது நாட்டிற்கு பெருமைகள் சேர்ப்பார்கள். ஒரு விளையாட்டின் மீதுள்ள ஒரு ரசிகனாய் நாமும் அதனை கண்டு மகிழ்வோம். ஆனால், என்றைக்காவது நாம், எதற்காக இந்த 4 வருட இடைவேளை விட்டு இந்த ஒலிம்பிக் போட்டிகளை நடத்துகிறார்கள் என்று யோசித்திருக்கோமா? […]
பாரிஸ் ஒலிம்பிக் : நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் 10 மீ. ஏர் ரைபிள் இறுதி போட்டியில் இந்திய அணியின் சார்பாக அர்ஜுன் பபுதா விளையாடி வந்தார். தகுதி சுற்றில் அபாரமாக விளையாடிய இவர் இறுதிப் போட்டிக்கும் சிறப்பாக விளையாடி தகுதி அடைந்தார். இந்நிலையில், இன்று மதியம் நடைபெற்ற இந்த ஏர் ரைபிள் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 2-வது பதக்கத்தை பெற்று தருவார் என இந்திய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 புள்ளிகள் வித்தியாசத்தில் […]
பார்வையாளர்கள் இன்றி, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் எனக்கு விருப்பமில்லை. என, டோக்கியோ 2020 தலைவர் யோஷிரோ மோரி கியோடோ தெரிவித்துள்ளார். இந்த வருடம் சரியாக இம்மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியிருக்கும். ஆனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இது குறித்து, டோக்கியோ 2020 (ஜப்பான் நாட்டின் ஒலிம்பிக் போட்டி கமிட்டி) தலைவர் யோஷிரோ மோரி கியோடோ அண்மையில் ஒரு செய்தி சேனலுக்கு தெரிவிக்கையில், ‘ […]
ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக கடந்த 2016-ம் ஆண்டு பிரேசில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதையெடுத்து இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகின்ற ஜூலை 24-ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சீனாவில் உருவான கொரோனா என்ற கொடூரன் உலகம் முழுவதும் 120-க்கும் மேற்ப்பட்ட நாடுகளில் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா ஜப்பானிலும் பரவியதால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுமா ..? […]