திருச்சியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. திருச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதல்வர் அவர்கள் ரூ.238 கோடி மதிப்பில் 5 ஆயிரத்து 635 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டு அரங்கில் ரூ.308 கோடி மதிப்பில் 5,951 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். ரூ.79 கோடி மதிப்பில் 22,716 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகினார். […]