தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் வருகிற 9ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தொடங்க உள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒலிம்பிக் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள டோங்கே என்ற இடத்திற்கு வந்த ஜோதிக்கு பாரம்பரிய இசையுடன் நடனமாடி பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 93 நாடுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகள் குவிந்து வருகின்றனர். தென்கொரியாவின் பகைநாடான வடகொரியாவும் இந்தப் போட்டியில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பல தங்கம் வாங்கவேண்டும் என்பது இங்கே இருக்கும் ஒவ்வொரு இந்தியனின் கனவும் கூட. ஆனால் நடப்பதோ தகுசுற்றுக்கே பல வீரர்கள் நடையை கட்டிவிடுகின்றனர். இந்தியாவில் நல்ல வீரர்கள் இல்லையா, இல்லை நல்ல வீரர்கள் ஒலிம்பிக் கமிட்டியின் கண்களில் சிக்கவில்லையா என தெரியவில்லை. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டி பியாசங் நகரில் நடக்க உள்ளது. இதில் பனிசறுக்கு விளையாட்டில் இந்திய வீரரான லூஜ் என்பவர் ஒலிம்பிக்கில் விலையாட தகுதி பெற்றுள்ளார். இவர் […]