380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆஸ்திரேலியாவின் கர்டின் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதைபடிவ வரலாற்றுக்கு முந்தைய மீன்களின் உடலுக்குள்ளிருந்து 380 மில்லியன் ஆண்டுகள் பழமையான இதயத்தை கண்டுபிடித்துள்ளனர், இது உலகின் பழமையான இதயம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் பண்டைய தாடை மீன்களில் புதைபடிவமான வயிறு, குடல் மற்றும் கல்லீரலையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பண்டைய உயிரினங்களின் மென்மையான திசுக்கள் அரிதாகவே பாதுகாக்கப்பட்டாலும், புதைபடிவ உறுப்புகள் இன்னும் அப்படியே இருப்பதைக் கண்டு குழு ஆச்சரியமடைந்தது. […]