மதுரை : தொடர்ச்சியாக மூதாட்டிகள் கொலை செய்யப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, கடந்த ஒரு வாரத்தில் 3 மூதாட்டிகள் கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் 70 வயதான மூதாட்டி முத்துலெட்சுமி. இவர் சடலமாக தன்னுடைய வீட்டில் மீட்கப்பட்டுள்ளார். மூதாட்டி முத்துலெட்சுமி அணிந்திருந்த கம்மலை காணாததால், நகைக்காக கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். […]