ஓக்கி புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதற்கட்டமாக ஓக்கி புயலால் உயிரிழந்த குடும்பங்களில்10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவ. 29-ஆம் தேதி ஒக்கி புயலால் கடுமையான சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக, கன்னியகுமாரி மாவட்டத்தில் இதுவரை கண்டிராத வகையில் விவசாய நிலங்கள், வீடுகள், சாலைகள், மின் கம்பங்கள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. ஒக்கி புயலினால் மரணமடைந்த […]
சென்னை கலைவாணர் அரங்கத்தில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அனைத்து மாவட்ட உதவி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக்கூட்டம் மற்றும் புத்தக்கப் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த விழாவில் புத்தகத்தின் பயிற்சி வகுப்பு மற்றும் அதன் பயன் பற்றியும் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஓகி புயலால் பெரும்பாலான மீனவர்வர்கள் கடலுக்குள் சென்று இன்னும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். அவர்களில் இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. கன்னியாகுமரியில் வள்ளவிளை மற்றும் சின்னதுறை கிராமத்தில் இருந்து சென்ற மீனவர்கள் எத்தனை பேர் இறந்தனர் என தகவல்கள் வெளியாகி அங்குள்ள மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். அதில் வள்ளவிளை கிராமத்தில் மட்டும் 33 மீனவர்களும், மேலும், அவர்களில் வெளியூர் மீனவர்கள் 37 பேர் பலியாகி இருக்கிறார்கள். மேலும், சின்னத்துறையில் மட்டும் 39 […]
ஒகி புயலால் காணாமல்போய் கடலில் மீட்கப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் திருவனந்தபுரம் மருத்துவமனையில் நடைபெற்ற டிஎன்ஏ சோதனையில் அடையாளம் காணப்பட்டது தூத்தூரை சேர்ந்த மீனவர் இருதயதாஸ், சின்னதுறையை சேர்ந்த மீனவர் கிளிட்டல் என தெரியவந்தது.. source: dinasuvadu.com
ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் எனக்கூறி, உயர்நீதி மதுரை கிளையில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அதில், ஓகி புயலில் மாயமானவர்களில் இன்னும் 271 மீனவர்கள் தான் மீட்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 271 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 47 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பதில் […]
ஒக்கி புயலால் உயிரிழந்த கன்னியாகுமரி மாவட்ட மீனவர் ஆண்டனி ராஜ் என்பவரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு… source: dinasuvadu.com
கன்னியாகுமரி மாவட்டம் வல்லவிளை பகுதியைச் சேர்ந்த 47 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது ஓகி புயலில் சிக்கினர். அதைத்தொடர்ந்து கடலில் சிக்கித்தவித்துவந்த அவர்களைத் தேடி வல்லவிளை மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அப்போது, கொச்சி கடல் பகுதியில் தத்தளித்த 47 பேரையும் மீட்ட சக மீனவர்கள் அவர்களை கொச்சி துறைமுகத்திற்கு அழைத்துவந்தனர். இதே போல, நேற்று முன் தினம் இதே மீனவர்கள் 10 மீனவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது. மீனவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல்படையும், இந்திய கப்பற்படையும் முனைப்பு […]
ஒகி புயலால் உயிரிழந்த அனைவருக்கும் பாகுபாடின்றி ரூ 20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரிய வழக்கு . தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.. source: dinasuvadu.com
ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி; மீனவர்கள், விவசாயிகள் பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உரிய நிதியை ஒதுக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் கோரிக்கை. கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ, விவசாய பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு. ரூ. 4 ஆயிரத்து 47 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் – கன்னியாகுமரி வந்த பிரதமர் மோடியிடம் […]
ஒகி புயலில் மாயமான 551 மீனவர்களை மீட்கக் கோரி வழக்கு. மீன்வளத் துறை மற்றும் பாதுகாப்பு துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு . மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.. source: dinasuvadu.com
ஒக்கி புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், மத்திய அரசு நிதி வழங்க முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒக்கி புயல் பாதித்து 21 நாட்களான நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பாமல், ஸ்தம்பித்திருப்பதாக கூறியுள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற […]
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஒகி புயல் கன்னியாகுமரி, கேரளா, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளைப் புரட்டிப்போட்டது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. ஒகி புயல் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் கன்னியாகுமரி மாவட்டத்தை ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். ஒகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் கேரளா மற்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தன. இந்தச் […]
‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்டு கடலில் மாயமான 500-க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்க கோரி பா.ம.க. சார்பில் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில துணைபொதுச்செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் டாக்டர் செந்தில், உழவர் பேரியக்க மாநில தலைவர் வேலுச்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். மாநில துணைத்தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடிசெல்வம், அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் சண்முகம், இமயவர்மன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் பெரியசாமி, வணங்காமுடி உள்ளிட்டோர் […]
ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு மீனவர்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்த அறிக்கையை தமிழக அரசு தயாரித்துள்ளது.
கன்னியாகுமரியில் ஒக்கி புயல் பாதிப்பு மற்றும் மாவட்டத்தின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
ஓகி புயலால் தமிழகத்தில் இதுவரை 14 பேர் உயிரிழப்பு” மாயமானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 433 பேர், கேரளாவைச் சேர்ந்தவர்கள் 186 பேர்” “ஓகி புயலால் இதுவரை 619 பேரை காணவில்லை” -மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்..
எதிர்க்கட்சியாக இருந்தாலும் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் காங்கிரஸ் கட்சி தேவையான உதவிகளை செய்யும் – ராகுல் காந்தி காணாமல் போன மீனவர்களை குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குரல் கொடுக்கும்.
நாடு முழுவதும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் – ராகுல் வேதனை * மத்தியிலும், மாநிலத்திலும் நாங்கள் ஆட்சியில் இல்லாவிட்டாலும், உங்கள் பிரச்சனைகளை உரத்த குரலில் எழுப்புவோம் – ராகுல்காந்தி
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட சின்னத்துறை கிராமத்தில் காணாமல் போன மீனவர்கள் குறித்து குடும்பத்தினரிடம் கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை என மீனவ மக்கள் ராகுலிடம் முறையீடு.