பஞ்சாபில் சுகாதாரத்துறை தொடர்பான அரசு விழாக்களில் நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து அம்மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு, சுற்றுசூழல் மாசு விளைவிக்கும் என்பது காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை நிகழ்ச்சிகளில் பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.