இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள் 94 சீட்டுக்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது 24 சீட்டுகளை பெற்று பாஜகவும், 10 சீட்டுகளை பெற்று காங்கிரஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது.