பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்தார். ராமர் கோவில் விவகாரத்தில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இதனால், சட்ட நடைமுறைகளுக்கு பின்னரே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். ரிசரவ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது அரசியல் நிர்பந்தம் எதுவும் இல்லை என்றும் ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே […]