50 % ஒபிசி இடஒதுக்கீட்டை நடப்பாண்டே அமல்படுத்த கோரிய அதிமுகவின் மேல்முறையீட்டு மனுவில் மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். […]