பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முடிந்த பின், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அறிவித்தார். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதையடுத்து, நாடு முழுவதும் அதற்கான சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இப்பொது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என ராகுல் […]
உத்தரப் பிரதேசத்தில் 37,000 ஓபிசி பெண்களுக்கு திருமண உதவி தொகையை அறிவித்தார் அம்மாநில அமைச்சர். உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவைச் சேர்ந்த 37,500 பெண்களுக்கு, அவர்களின் திருமணத்தின் போது தலா ரூ.20,000 திருமண உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நரேந்திர காஷ்யப் அறிவித்துள்ளார். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் பெண்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இந்தத் தொகை திருமணத்திற்கு 90 […]
OBC பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சீராய்வு மனு அளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் OBC பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எஸ்.சி/ எஸ்.டி , MBC, BC வகுப்பினருக்கு அளிக்கும் இடஒதுக்கீடு போல 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்சநீதிஅம்மன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை முடிவில் கடந்த […]
மக்களின் நலனுக்காக கொள்கை முடிவை மாற்றி அமைக்க பரிசீலனை செய்யலாமே என உயர் நீதிமன்ற மதுரையை கிளை. மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவு போல ஓபிசி அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கோரி உயர் நீதிமன்ற மதுரையை கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஓபிசி பிரிவின் அடிப்படையில் கணக்கெடுப்பை நடத்த கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை ரிதியான முடிவு என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 1951-ல் எடுக்கப்பட்ட மத்திய அரசின் கொள்கை […]
எஸ் சி,எஸ்டி, ஓபிசி மாணவர்கள் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பை உயர்த்தவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்கு விழுப்புரம் எம்பி ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பல்வேறு விதமான படிப்பு உதவித் தொகைகள் மத்திய அரசின் பங்களிப்போடும், தமிழ்நாடு அரசாலும் வழங்கப்படுகின்றன. 8 லட்ச ரூபாய் ஆண்டு […]
ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல். இட ஒதுக்கீட்டுக்கான ஓபிசி பிரிவினர் பட்டியலை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் தயாரிப்பதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், சட்டத் திருத்த மசோதா டெல்லி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது. இதன்பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஓபிசி பிரிவினரை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு […]
மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்திய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட். எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற பிற்படுத்தப்பட்டோர் (OBC) பிரிவினருக்கு 27 சதவீதமும் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு (EWS) 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் இதன் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. நீண்ட சட்ட போராட்டம், அரசியல் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட்ட முடிவுக்கு, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் […]
ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமாகி இருப்பது சமூகநீதிப் பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றி. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் 27 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டே வழங்கப்படும் என்றும், பொருளாதாரத்தில் பின்தங்கிய […]
அகில இந்திய மருத்துவ இடங்களில்,ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில்,இதர பிறப்டுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி,மாநில அரசுகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டா என்ற பிரிவில் ஓபிசிக்கு 27 % ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. […]
OBC பிரிவினருக்கு சாதிச் சான்று வழங்கும் போது ஊதியம் மற்றும் வேளாண்மை வருமானத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசு பணியிடங்களுக்கான நியமனங்கள் மற்றும் மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) வளமான பிரிவினரை (Creamy layer) நீக்கி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்கான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் இந்திய அரசால் அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வளமான பிரிவினரை நீக்குவதற்கான நெறிமுறைகளும் […]
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 200 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி அரசியல் பிரபலங்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பலரும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட விசிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
“ஓபிசி குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ள மத்திய அரசுக்கு என்ன தயக்கம்?” என மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு ஒருபுறம் நடக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஓபிசி குறித்தும் கணக்கெடுக்க கோரிய […]
உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது. இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பின்படி, மருத்துவப் […]
OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது. தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அவ்வுத்தரவில் ஒரு குழுவை அமைக்கவும், அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளின் படி இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கடந்த ஜூலை 27ந்தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் இழுபறி ஏற்படவே தமிழக […]
ஓ.பி.சி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீட்டை நடப்பாண்டிலேயே அமல்படுத்தக் கோரி அதிமுக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. மருத்துவப் படிப்பில் OBC 50% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு செய்துள்ளது. ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது பற்றி மத்திய அரசு 3 மாதத்தில் முடிவெடுக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவுக்கு 50% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கால தாமதம் தேவையில்லாதது என்று அதிமுக மேல்முறையீடு […]
ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மருத்துவ மேற்படிப்பில் ஓபிஎஸ் பிரிவினருக்கான 50 சதவிகிதம் இடஒதுக்கீடு தொடர்பான குழுவுக்கு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக மேலாண் இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி உமாநாத் உள்ளார். தற்போது, தமிழக அரசு சார்பில் ஓ.பி.சி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டை இறுதி செய்ய அமைக்கப்பட்ட குழு உறுப்பினராக உமாநாத்தை அதிகாரியாக நியமித்து தலைமை செயலாளர் […]
“இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் OBC & SC/ST பிரிவினரின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ள செயல் பேரதிர்ச்சியளிக்கிறது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட இந்தியக் குடிமைப் பணிகளுக்கான தேர்வின் முடிவுகள் கடந்த 4.8.2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான ‘கட்-ஆப்’ […]
ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் […]
இட ஒதுக்கீடு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் […]