உலகெங்கிலும் பரவியுள்ள பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல் குறித்து அமெரிக்கா விழிப்புடன் இருக்கும். அமெரிக்க படையினர், ஒசாமா பின்லேடனைக் கொன்ற 10-வது ஆண்டு நினைவு நாளில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் “இது நான் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்” என தெரிவித்துள்ளார். பைடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்து அமெரிக்க படைக்களையும் அகற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் துணை ஜனாதிபதியாக இருந்த பைடன், இந்த பணி […]
ராணுவத்தின் சட்ட விரோத மற்றும் மிருகத்தனமான முயற்சி ஒருபோதும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம், நாடாளுமன்றத் தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மீண்டும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி நிலையில், இந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது. மேலும் ஆங்சாங் சுகி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் ராணுவத்தினரால் சிறை வைக்கப்பட்ட நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. இந்தப் போராட்டத்தை இராணுவத்தினர் […]
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, மாதத்திற்கு இரண்டு முறை மக்களை சந்தித்து குறைகளை கேட்பார். ஒபாமாவிற்கு பின் ஒரு சிறந்த தலைவராக ஸ்டாலினை தான் நான் பார்க்கிறேன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஸ்டெர்லைட் விவகாரத்தில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற அன்று இரவு நான் அங்கு சென்று பார்த்தேன். அவர்களுடன் இருந்தவன் என்ற முறையில், அது மிகவும் […]
1979 ஆம் ஆண்டில் ஹவாயில் உள்ள புனாஹூ பள்ளியில் கூடைப்பந்து போட்டியின் போது முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா அணிந்திருந்த ஜெர்சி கடந்த வெள்ளிக்கிழமை கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் நடந்த ஏலத்தில் 192,000 டாலர் அதாவது ஒரு கோடியே 41 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது. இந்த ஏலம் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி ஏலங்களுக்கு புதிய உலக சாதனை படைத்தது. ஒபாமாவின் உயர்நிலைப் பள்ளி கூடைப்பந்து ஜெர்சி முந்தைய உலக சாதனையை முறியடித்ததாக ஏல நிறுவனமான ஜூலியன் ஏலம் […]
டிரம்ப் நிர்வாக திறனில் உள்ள குளறுபடியால் தான் அமெரிக்கா பேரழிவை சந்தித்துள்ளது என்று முன்னாள் அதிபர் ஒபாமா கடுமையான விமர்சனம். சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 13,47,318 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 80,040 ஆகவும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனிடையே இந்த கொரோனா வைரஸை சீனாதான் பரப்பி விட்டதாக தொடர்ந்து அதிபர் ட்ரம்ப் […]
அமெரிக்க முன்னாள் அதிபர்கள் கிளிண்டன் மற்றும் ஒபாமா வீடுகளுக்கு அனுப்பப்பட்ட வெடிப்பொருட்களை போலீஸார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரம், வெஸ்ட்செஸ்டர் பகுதியில் கிளிண்டனும், அவரது மனைவி ஹிலாரி கிளிண்டனும் வசித்து வருகிறார்கள். அவர்களது முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிப்பொருட்கள் அடங்கிய பார்சலை அனுப்பியுள்ளார். எனினும் அந்தப் பார்சல், கடிதங்களை ஆய்வு செய்யும் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. இதேபோல், வாஷிங்டனில் உள்ள ஒபாமா வீட்டுக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பார்சலையும் அமெரிக்க உளவுப் […]
டெல்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவர்கள் பேசியது என்னவென்றால்: தொழில்நுட்பமானது, வளர்ச்சியடைந்து வரும் உலகில் இடைவெளிகளை நிரப்பும் பாலமாக இருக்கிறது. அதேநேரத்தில், தொழில்நுட்பத்தின் திடீர் வளர்ச்சியில் பல்வேறு இணையதளங்கள் மக்களுக்கு தீய செய்திகளைப் தருகின்றன. நவீன தகவல் சாதனங்கள் தீவிரவாதிகளுக்கும் உதவுகின்றன. தீயவர்களும் சமூக விரோத சக்திகளும் நவீன தகவல் சாதன வசதிகளை பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிடில் தகவல் தொழில்நுட்பமானது, மக்களை […]