தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் ஓ.எஸ்.மணியன் போட்டியிட்டார். திமுக சார்பில் வேதரத்தினம் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 12, 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா். அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வேதரத்தினம், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுக வேட்பாளா் தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்துள்ளாா். பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை வாங்கியுள்ளார். வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு […]
தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேதாரண்யத்தில் ஓ.எஸ் மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இருவேறு சமூக மக்களிடையே விரோத்தை தூண்டி ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதாக மனுதாரர் தரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓ.எஸ் மணியன், தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோர் பதில் அளிக்க உத்தரவு […]
அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இவர் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் ஓரடியம்புலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், பாரதி, வாசுகி ஆகிய இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழக போலீசார் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதில் முழு கவனத்துடன் திறமையாக செயல்படுவார்கள் .எனவே தீவிரவாதிகள் ஊடுருவல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. காஷ்மீர் விவகாரத்தில், பாதுகாப்பிற்காக மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளை, எதிர்கட்சிகள் ஏற்று நடந்து கொள்ள வேண்டும். காஷ்மீர் விவகாரம் தொடர்பான போராட்டம் குறித்து ஸ்டாலின் மாற்றி மாற்றி பேசி வருகிறார். அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்ற முறையில் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார் .காஷ்மீரின் சிறப்பு […]