தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், தமிழக துணை முதல்வரின் சகோதரர் மற்றும் தேனீ ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக செயல்பட துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலதடை விதித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க […]