நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 194 ரன்கள் எடுத்தனர். 195 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 173 ரன்கள் மட்டுமே எடுத்தன. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. […]