உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் இன்று டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர். நீதிபதிகள் இருவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது […]
டெல்லியில் இன்று அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களின் 39-வது தலைமை நீதிபதிகள் மாநாடு நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டுக்கு 6 ஆண்டுகளுக்கு பின்னர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமை தாங்குகிறார். இதைத் தொடர்ந்து,நாளை (ஏப்ரல் 30-ஆம் தேதி) விக்யான் பவனில் தலைமை நீதிபதிகள் மற்றும் முதல்வர்களின் கூட்டு மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் கடந்த 2016 இல் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் மற்றும் நீதி வழங்கல் […]
உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றார். உச்ச நீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக இருந்த பாப்டே நேற்று ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று 48 ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணாவிற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவிப்பிராமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.