நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களின் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி. நாடு முழுவதும் பல்வேறு தீர்ப்பாயங்களில் உள்ள காலியாக பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும், கால அவகாசம் வழங்கியும், இந்த பணியிடங்களை மத்திய அரசு இதுவரை நிரப்பவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கும் தீர்ப்புகள், உத்தரவுகளை மத்திய அரசு மதிப்பதே இல்லை […]
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதியாக, மூத்த நீதிபதி ரமணாவை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே பரிந்துரை செய்தார். பரிந்துரைக் கடிதத்தை எஸ் ஏ பாப்டே மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே ஏப்ரல் 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.