நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறது. அதன்படி,டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொள்கிறார். குறிப்பாக,இந்த கூட்டத்தில் உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தொடக்கம். ஊட்டியில் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து தரும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் துவக்கி வைத்தார். கோவை மற்றும் உதகை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்கு சென்றுள்ளார். இதுபோன்று நேற்றைய தினம் உதகையில் 124-ஆவது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த அவர், இன்றும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடக்கி வைக்கிறார். அதில் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் […]