எல்லா தரப்பினரையும் ஏமாற்றும் வெற்று நாடகக் காட்சி தான் திமுக ஆட்சி என டிடிவி தினகரன் விமர்சனம். தி.மு.க அரசு மக்களை நம்ப வைத்து கழுத்தறுத்து வருகிறது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு, இப்போது ஒப்பந்த பணியைக்கூட நீட்டிக்க முடியாது என்று அவர்களை வீட்டிற்கு அனுப்பியிருக்கிறது என […]
செவிலியர்கள் யாரும் உடலை வறுத்துக்கொள்ள வேண்டாம் என்று மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தல். தகுதியுடைய செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்திரம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 8 செவிலியர்கள் சங்கம் உள்ளது. இதனால் யார் போராட்டம் நடத்துகின்றனர் என்று தெரியவில்லை. போராடும் செவிலியர்கள் சார்பாக யாரும் எங்களை பார்க்க வரவில்லை. செவிலியர்கள் யாரும் உடலை வறுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார். இதனிடையே, பணி நிரந்திர உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து […]
கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து செவிலியர்களுக்கும் விரைவில் படிப்படியாக அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பணிபுரிய ஓராண்டு ஒப்பந்தம் அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.பின்னர் அவர்களது பணிக்காலத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களில் 1000 பேருக்கு மாற்றுப்பணி வழங்கப்பட்டுள்ளது.சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து,மீதமுள்ள செவிலியர்கள் தங்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை […]
தற்காலிகமாகப் பணியமர்த்தப்பட்ட ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார். தற்காலிக நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை தமிழக முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா முதல் அலை: “கொரோனா முதல் அலையின்போது தமிழகத்தில் சுமார் 3,000 செவிலியர்கள் மருத்துவத் தேர்வாணையத்தால் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு […]
கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில்,’உலக செவிலியர் தினத்தை’ முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிழ்ச்சியில் மருத்துவமனையின் முதல்வர்(டீன்),செவிலியர்களின் காலில் விழுந்து “நீங்கள் தான் கடவுள்” என்று கூறி கண்ணீர் விட்டு மரியாதை செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்’ என்னும் செவிலியர்,ஐரோப்பாவில் நடைபெற்ற க்ரீமியன் போரில் இரவு வேளைகளிலும் கையில் விளக்கை ஏந்தி,போர்க்களத்தில் காயம்பட்ட வீரர்களுக்கு தேடிச் சென்று சிகிச்சையளித்து மருத்துவ சேவை புரிந்தார். எனவே,நைட்டிங்கேலின் பிறந்த நாளான மே 12 ஆம் தேதி,ஒவ்வொரு […]
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த வரும் 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நிரந்தர பணிக்கு மாற்றப்பட்ட 1,212 செவிலியர்கள் சென்னையில் கொரோனா பணியில் ஈடுபடவுள்ளனர். பின்னர் தங்களது மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என்றும் தெரிவித்துள்ளனர். ரூ.15,000 சம்பளம் பெற்று வந்த செவிலியர்களுக்கு இனி ரூ.40 ஆயிரம் ஊதியம் கிடைக்கும் என்றும் […]
சென்னையில் இயங்கும் மினி கிளினிக்கில் பணியாற்ற மருத்துவர்கள் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகிய பணிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மொத்தம் 600 காலியிடங்கள் உள்ளன. அதில், மருத்துவர் பணிக்கு 200, செவிலியர் பணிக்கு 200, மருத்துவப் பணியாளர் பணிக்கு 200 காலியிடங்கள் உள்ளன. வயது வரம்பு அதிகப்பட்சமாக 40 வயது இருக்கவேண்டும். ஊதியம் ரூ.6,000 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படள்ளது. இந்த பணிகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முற்றிலும் […]
செவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செவிலியர்களின் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல் எம்.ஆர்.பி.யில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்யப்படாத செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்திப் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செவிலியர்களின் பணி நிரந்திரம் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியின் […]
எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். எய்ம்ஸில் பணிபுரியும் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது. 6-வது மத்திய ஊதியக்குழு உட்பட அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) செவிலியர் சங்கத்திற்கு பல கோரிக்கைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இதனால், தங்கள் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய வலியுறுத்தி செவிலியர் சங்கம் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது. செவிலியர்களின் வேலைநிறுத்தம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் பயத்தை அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில், எய்ம்ஸ் இயக்குனர் […]
இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு நாட்டில் உள்ள பெண்கள் தங்கள் சகோதர்கள் கையில் ராக்கியை கட்டுவது வழக்கம். இதனால், ரக்க்ஷா பந்தனை தொடர்ந்து, அனைத்து தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் சங்கம், ராணுவ நர்சிங் சேவை மற்றும் ஜனாதிபதியின் மாளிகையில் உள்ள கிளினிக் செவிலியர்களுடன் செவிலியர்களுடன் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கொண்டாடினார்.
ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்களை பணி அமர்த்த முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப்பணியாளர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் சுகாதாரப்பணியாளர்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பன்முக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஓர் அங்கமாக மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் ஏற்கனவே 530 […]
மதுரை பேச்சியம்மன் படித்துறை பகுதியை சார்ந்தவர் கார்த்திகா. இவர் மதுரையில் உள்ள ராஜாஜி அரசு மருத்துவமனையில் மகப்பேறு செவிலியர் உதவியாளராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் மதுரையை அடுத்த பரவையை சார்ந்த தனக்கொடி என்பவரின் உறவுக்காரப் பெண் பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை உறவினர்களும் காட்டுவதற்கு கார்த்திகா ரூபாய் 1000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தனிக்கொடி புகார் கொடுத்துள்ளார். பின்னர் அரசு மருத்துமனை முதல்வர் சங்குமணி நடத்திய […]