விபத்தில் சிக்கி இதயத்துடிப்பு நின்ற இளைஞருக்கு முதலுதவி செய்து காப்பாற்றிய செவிலியர் வனஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த கோட்டூர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தான் வனஜா. இவர் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பி கொண்டிருந்த பொழுது, இவர்கள் கார் முன்பு சென்று கொண்டிருந்தஇருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு வந்ததால் விபத்த […]