வடகொரியா அணுகுண்டு சோதனை செய்ததற்காக வடகொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை விதித்தன. கடந்த ஆண்டு வடகொரியா அடுத்தடுத்து பல்வேறு அணுகுண்டு சோதனை நடத்தியது. இந்நிலையில் அமெரிக்காவுடன் வடகொரியா நடத்தி வந்த பேச்சு வார்த்தை முடங்கியநிலையில் நேற்று வடகொரியா 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்து பார்த்தது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு வடகொரியா சோதனை செய்வது இதுவே முதல்முறை ஆகும்.