தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் இன்று தூத்துக்குடி அணியும் மதுரை அணியும் விளையாடி வருகின்றனர். இந்த போட்டி திண்டுக்கல் மாவட்டம் NPR கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தூத்துக்குடி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அந்த அணி 20ஓவர்களில் 5விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் அதிக பட்சமாக சுப்பிரமணியம் ஆனந்த் 44 ரன்கள் எடுத்துள்ளார். மதுரை அணியில் அதிகபட்சமாக அபிஷேக் தன்வர் 28 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.