இந்தோனேசியாவை சேர்ந்த சினோவேக் தடுப்பூசி சோதனையின் முன்னணி பெண் விஞ்ஞானி நோவிலியா ஸ்ஜாஃப்ரி உயிரிழந்துள்ளார். அதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் மிக அதிகளவில் பரவி வரும் நிலையில், கொரோனவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக பல நாடுகளிலும் தடுப்பூசி கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், இந்தோனேசியாவிலும் சினோவோக் தடுப்பூசி மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை கண்டறிவதற்கான சோதனைகளில் முன்னணி விஞ்ஞானியாக விளங்கிய நோவிலியா ஸ்ஜாஃப்ரி எனும் பெண் விஞ்ஞானி தற்பொழுது உயிரிழந்துள்ளார். […]