நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரியில் வருகின்ற நவம்பர் 2,3 பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு விடுத்துள்ளது.கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2 ஆம் தேதியும் ,தீபாவளி திருநாளை முன்னிட்டு நவம்பர் 3 ஆம் தேதியும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வரும் நிலையில், கடந்த மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதி அளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. இதற்கிடையே, ஆந்திராவில் நவம்பர் 2-ம் […]