அதிமுக – பாஜக கூட்டணி : “இனி யாரும் பேசாதீங்க..,” கட்சி நிர்வாகிகளுக்கு கடிவாளம் போட்ட இபிஎஸ்?
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி அரசுக்கு (வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்) வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பு கூறி வரும் நிலையில், அதுபற்றி தேசிய தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும் என தமிழக பாஜக கூறி வருகிறது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான […]