வடக்கு சிக்கிமில் வழிதெரியாமல் தவித்த சீனர்களை இந்திய ராணுவம் மீட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றமான சூழ்நிலை நிலவி வரக் கூடிய நிலையில் நேற்று முன்தினம் வடக்கு சிக்கிமின் பீடபூமி பகுதியில் 17 ஆயிரத்து 500 அடி உயரத்தில் மூன்று சீன குடிமக்கள் வழிதவறி மாட்டி கொண்டுள்ளனர். இந்நிலையில் அவ்விடத்திற்கு விரைந்த இந்திய ராணுவம் அவர்களை மீட்டு உதவி செய்துள்ளது. பூஜ்ஜிய வெப்பநிலையில் சிக்கிக் கொண்டிருந்த சீன மக்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து இந்திய […]