சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நேற்று (15-10-2024) காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை 5.30 மணி அளவில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுது. இன்று (16-10-2024) காலை 8.30 மணி அளவில், அதே பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 320 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமார் 400 கிலோமீட்டர் […]
சென்னை : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்து உள்ளது. தற்பொழுது, தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்-கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், […]
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதியதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி வந்து கொண்டிருக்கிறதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சாலைகளில், சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ரயில் சேவை , விமான சேவைகள், பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் முக்கிய […]
சென்னை : பருவமழை காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் விளைவாக தற்போது, சென்னையில் அமைந்தகரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்வாங்கி இருக்கிறது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைப்பகுதியானது 150 மீ. தூரத்திற்கு, 20 அடி பள்ளத்திற்கு உள்வாங்கி இருக்கிறது என கூறப்படுகிறது. மேலும், அந்த கட்டிடத்தைச் சுற்றியுள்ள சுவர்களில் பெரிதளவு விரிசல்களும் ஏற்பட்டு இருக்கிறது. அந்த அடுக்குமாடி […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே சென்னை உட்பட பல மாவட்டங்களில கனமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், தற்போது வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் அடுத்த 48 மணி நேரம் எப்படி இருக்கும் என்பதற்கான நிலவரத்தை வானிலை ஆய்வு தற்போது அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இன்று (அக்டோபர் 15) தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை இன்றோ நாளையோ தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, தமிழகம், புதுவை, கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே, மழை வெளுத்து […]
சென்னை : தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இன்று காலை 5.30 மணி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுச்சேரி, வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதிகளை நோக்கி நகர கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை […]
சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (14.10.2024) தலைமைச் செயலகத்தில், கனமழை எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பங்கேற்னர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், “ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுங்கள். ஆதரவற்றோர் […]
சென்னை : தமிழநாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது வங்கக்கடலில் உருவானது என்றும், இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் அதனால் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான கடற்கரை பகுதியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து […]
சென்னை : தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் […]
சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழையைப் பொருத்தவரை கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தில் இயல்பைவிட மழை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில், மழையால் பாதிக்கப்படக்கூடிய […]
தமிழகத்தில் வரலாறு காணாத கன மழையை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் சமீபத்தில் சந்தித்த நிலையில், நேற்று முன்தினம் முதல் தென் தமிழகத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசியில் அதி கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரசும், அரசு அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்றும் இந்த […]