பிரதமர் மோடி சமூகவலைதளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப் போன்றவையில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மோடியின் இந்த பதிவு அவரை பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் “NoModiNoTwitter ” என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என பலர் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி வருகின்றனர்.