கொரோனா காரணமாக இந்தியாவில் பள்ளிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. பின்னர், ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைனில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில், ஆக்ஸ்பாம் இந்தியா நடத்திய புதிய ஐந்து மாநில கணக்கெடுப்பின்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களில் 80% க்கும் அதிகமானோர் ஊரடங்கு காலத்தில் கல்வி கிடைக்கவில்லை என்று கூறியதாக ஆய்வு தெரிவித்துள்ளது. அதில், பீகாரில் 100% பெற்றோர்கள் இந்த கருத்துக்கு குரல் கொடுத்துள்ளனர். பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் 1,158 […]