உலகில் உள்ள அனைத்து பெண்களின் கல்விக்காக நிதி திரட்டும் திட்டத்திற்காக 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த இளம்பெண் மலாலாவுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது. இத்திட்டம் குறித்து மலாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் அவர்களது எதிர்காலத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், சமூக சேவை ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் அதிகாரத்தை […]
வரலாற்றில் இன்று – “மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா இந்திய சமுதாயத்துக்கு ஆற்றியுள்ள அரும்பணிகளுக்காகவும் அவரது ஒப்பற்ற தியாகத்தைப் போற்றும் வகையிலும் அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” என்று கடந்த ஆண்டு இதே நாளில் சசிகலா தலைமையில் கூடிய அ .தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அணு ஆயுத ஒழிப்பிற்காக போராடி வரும் ஐகேன் என்ற சமூக சேவை அமைப்புக்கு இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டு தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐகேன் அமைப்பின் இயக்குநர் பியாட் ரிஸ்ஃபின் உலக அமைதி நோபல் பரிசுக்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார். இந்த ஐகேன் அமைப்பு ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இது சுமார் 101 நாடுகளை சேர்ந்த 468 தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்புகளின் கூட்டமைப்பாகும். அணுஆயுதத் தடை […]