பங்காளி நாடான பாகிஸ்தானுடன் அமைதி பேச்சு நடத்த இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக, பாகிஸ்தான் கூறியுள்ளதில் எந்த உண்மையும் இல்லை’ என, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், காஷ்மீர் உட்பட, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், ‘அமைதி பேச்சு நடத்த ஆர்வமாக இருப்பதாக இந்தியா செய்தி அனுப்பியுள்ளது’ என, குறிப்பிட்டார். இது குறித்து, கருத்து தெரிவித்துள்ள இந்திய […]