திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் செருப்பை கழற்றி பேசியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், அண்மையில் யூடியூபர் ஒருவரின் கைதை எதிர்த்த்ததால், தன்னை சங்கி என்று பலரும் விமர்சித்ததாகவும், ஆனால், யூடியூபர் மீதான வழக்கு விவாதத்தில் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அரசு வழக்கறிஞர் வெளியேறியதாகவும் கூறியுள்ளார். […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் அணல் பறக்க தொடங்கியுள்ளது.திமுக மற்றும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை இன்னும் முடிவு பெறாத நிலையில்,நாம் தமிழர் கட்சியின் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்க உள்ளது. ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் இன்று நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.இதில் தமிழக சட்டசபை தேர்தலுக்காக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிவிக்கிறார் சீமான்.இந்த வேட்பாளர்கள் அறிவிப்பில் அறிவிப்பில் 50% பெண்கள் 50% ஆண்கள் இடப்பெற உள்ளனர்.