இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னையிலிருந்து, 60 கி.மீ தொலைவில் இந்நீர்த்தேக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. தற்போது, இந்த ஏரியின் நீர்மட்டம் 35 அடி கொண்டுள்ள இந்த ஏரி 33 அடி ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஏரிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் நீர்மட்டம் மேலும் உயரும் […]
நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரை, சாந்தோம், அடையார், பட்டினப்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், வடபழனி, ஆதம்பாக்கம், வேளச்சேரி போன்ற பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்து வருகிறது. புதுச்சேரி வடக்கே நிவர் புயல் அதிதீவிர புயலாக கரையை கடந்து வருகிறது. புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்து வருகிறது. […]
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் பபுதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. Nov25: 11.43 PM: புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது: இந்த நிவர் புயலின் முன்பகுதி, மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு வருகிறது. Nov25: 11.26 PM: இந்த நிவர் புயலின் எதிரொலியாக கடலூரில் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. Nov25: 11.16 […]
பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் பேட்டி அளித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் தெரிவிக்கட்டுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தேவையில்லாமல் வெளியே வருவதை பொதுமக்கள் தவிர்க்க […]