டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மம்தா பானர்ஜியை தவிர இந்தியா கூட்டணியின் மாநில முதல்வர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் மம்தா பேசுகையில், தனக்கு போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், தான் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டி இருந்தார். மேலும், மம்தா பேனர்ஜி பேசுகையில் , பாஜக மற்றும் கூட்டணி கட்சி முதல்வர்களுக்கு 10 -20 நிமிடங்கள் பேச […]
மு.க.ஸ்டாலின்: இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்தியா கூட்டணியில் உள்ள திமுக , காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜி மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்டார். மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்கம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என கூறி அதற்கு […]
டெல்லி: இன்று பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள் மற்றும் பாஜக ஆதரவு மாநில முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். மம்தா பேனர்ஜியை தவிர இந்தியா கூட்டணியில் உள்ள மாநில முதலமைச்சர்கள் பல்வேறு காரணங்களால் கலந்துகொள்ளவில்லை. மத்திய பட்ஜெட்டில் மேற்கு வங்க மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தான் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் […]
டெல்லி : மாநிலங்களின் கோரிக்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர காங்கிரஸ், திமுக உள்ளிட்ட I.N.D.I.A கூட்டணி கட்சிகள் ஆளும் முதல்வர் கலந்துகொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் இருந்து கொண்டு கலந்து கொள்ளும் ஒரே முதல்வர் […]
நிதி ஆயோக் : இன்று பிரதமர் தலைமையிலான நிதி ஆயோக் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநில முதலைமைச்சர்களும் கலந்துகொள்ள உள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. இது குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கை மற்றும் வீடீயோ வெளியாகியுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் 2024இல் தமிழகத்திற்கு என்று சிறப்பு திட்டம், நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணமாகவே நிதி ஆயோக் கூட்டத்தில் தான் […]
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள ஜூலை 27ம் தேதி டெல்லி செல்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டெல்லியில் ஜூலை 27-ஆம் தேதி (சனிக்கிழமை)அன்று நடைபெறும் “நிதி ஆயோக்” ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினன்ட் கவர்னர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், 2047க்குள் நாட்டை வளர்ந்த […]
அரசியல் சாசனத்துக்கு விரோதமாக மாநிலங்களுக்கான நிதியை குறைக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பான ஆடியோ ஒன்றை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, பதிவிட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியின் அரசியல் சாசன விரோத செயலை நிதி ஆயோக் தலைமை அதிகாரி வெளிப்படுத்தியுள்ளார். 14வது நிதிக் குழுவை மிரட்டி, மாநில அரசுகளின் வரி வருவாயில் இருந்து திருட அனுமதிக்கும் வகையில், பிரதமர் மோடியே அரசியல் சாசனத்துக்கு […]
விமான போக்குவரத்தில் தற்போது வரை எந்த மாறுதலும் இல்லை. – நிதி ஆயோக் குழுவின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் வி.கே.பால். தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் உருவெடுக்க தொடங்கி உள்ளன. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியது மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் வருமா.? விமான சேவை கட்டுப்பாடுகள் இருக்குமா என்ற ஐயம் பலரது மனதில் எழுந்தது. தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக, நிதி ஆயோக் […]
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கான்டின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் பொது கொள்கை சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கான்ட் இரண்டு ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டார்.இதனையடுத்து,இந்த பதவிக்காலம் 2019 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து மீண்டும் நடப்பு ஆண்டு ஜூன் 30 வரை பதவிக்காலம் இரண்டு ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில்,30.06.2021 முதல் 30.06.2022 […]
நிதி ஆயோக் அலுவலகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் உள்ள நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இயக்குநர் பதவியில் இருந்த ஒருவருக்கு இன்று காலை 9 மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரியவர, உடனடியாக அவர் பணியாற்றி வந்த நிதி ஆயோக் அலுவலக கட்டிடத்தை இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. மேலும் மூடப்பட்ட கட்டிடத்திற்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் […]
2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது. இந்த பட்டியலில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்துள்ளது. சமூக ,பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து ,தர வரிசை பட்டியலை தயாரித்தது நிதி ஆயோக். 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.இந்த பட்டியலில் கேரள மாநிலம் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.2 -வது இடத்தில் 69 புள்ளிகளுடன் இமாசலப் […]
உலகில் குழந்தைகள் வாழ மோசமான நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருப்பதாக இருப்பதாக நிடி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த மதம் மட்டும் பீகாரில் 150 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் நாட்டின் சுகாதாரம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் குழந்தைகள் மரண விகிதம் 2000 ம் ஆண்டை ஒப்பிடும் போது தற்போது ஏறத்தாழ பாதியாக குறைந்துள்ளது. இதற்கு குழந்தைகளுக்கு நோய் பரவாமல் இருக்க அரசின் நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முக்கிய காரணங்களாகும். ஆனால் […]
மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் முக்கியப் பங்களிக்கும் நிதி ஆயோக் அமைப்பு எலக்ட்ரிக் வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால் ஆங்காங்கே மின்னூட்ட மையங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஏற்கனவே மின்பற்றாக்குறை நிலவும் நாட்டில் இதனால் நெருக்கடி மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு லித்தியம் பேட்டரிகள் தேவை எனவும் லித்தியம் சுலபமாக கிடைக்கக் கூடிய பொருள் அல்ல என்றும் நிதி ஆயோக் கருதுகிறது. பேட்டரி தயாரிப்பில் இந்தியா இன்னும் நிபுணத்துவம் பெறவில்லை எனவும் பேட்டரி இறக்குமதிக்கு சீனாவைத்தான் சார்ந்திருக்க வேண்டும் எனவும் நிதி ஆயோக் […]