சென்னை : அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், படத்தின் தயாரிப்பு பணிகள் மற்றும் பிற காரணங்களால் வெளியீட்டு தேதி பிந்திய தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது 2025 ஜனவரி மாத இறுதியில் வெளியீடு காத்திருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது. விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியுள்ள நிலையில், அதே தேதியில் தங்களுடைய படங்களை ரிலீஸ் செய்வதற்கு அந்தந்த படங்களின் தயாரிப்பு […]
டெல்லி : 2022ஆம் வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏ.ஆர்.ரகுமான், நித்யா மேனன், அன்பறிவு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய திரைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் சினிமா தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்குத் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 70வது தேசிய விருது நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட திரைக் கலைஞர்களின் விவரங்கள் பின்வருமாறு… சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா). சிறந்த நடிகை – நித்யா […]
தனுஷின் 44 வது படத்தில் நடிகை நித்யா மேனன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பதாகவும் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இயக்குனர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், தற்போது […]
நித்யா மேனன் தற்போது ஓடிடியில் வெளியான படத்தில் பெண்ணின் உதட்டில் கொடுத்து லெஸ்பியனாக நடித்துள்ள காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நித்யா மேனன், தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் மெர்சல் படத்திலும், சூர்யாவுடன் 24 படத்திலும் நடித்திருந்தார்.அதனையடுத்து திகில் கலந்த கிரைம் திரில்லர் படமான சைக்கோ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது இவரது நடிப்பில் ப்ரீத் இன்டூ தி ஷேடோ என்ற படம் […]
தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து த அயன்லேடி படத்தில் நடிக்கவும் இருக்கிறார். ரசிகர்கள் விரும்பி பார்க்கும் ஒரு படத்தில் நடித்து அதில் எனது நடிப்புக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் இருக்கிறார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்று […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க பலரும் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இதில் முதலில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து தலைவி திரைப்படத்தினை வேக வேகமாக தயாராக்கி வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இதனை தொடர்ந்து தி அயர்ன் லேடி எனும் தலைப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை […]
தமிழில் ஓகே கண்மணி, மெர்சல், 24 என சில படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் மனதில் நின்றவர் நித்யா மேனன். இவர் அடுத்ததாக ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அண்மையில் ஒரு போட்டோ ஷூட் நடாத்தியுள்ளார். அதில் ஆளே அடையாளம் தெரியாமல் மார்டனாக கலக்கல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது நித்யா மேனன் தானா என ரசிகர்கள் குழம்பி போய் உள்ளனர்.
தமிழில் ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் ஆகிய.படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார். இவர் அண்மையில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கூறியதாவது, தமிழ் சினிமாவில் ரெம்ப ரெம்ப நல்ல நடிகர் சூர்யா தான். விஜய் மிகவும் அமைதியானவர் அவர் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு அமைதியாக இருப்பார் என கூறினார். DINASUVADU
தமிழக முன்னாள் முதல்வர் செல்லி ஜெ.ஜெயலலிதா அவர்களின் வாழ்கை வரலாறு தற்போது பிரமாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தை மிஸ்கினின் பெண் உதவி இயக்குனர் பிரியதர்ஷினி இயக்க உள்ளார். இதில் ஜெயலலிதாவாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். சசிகலா வேடத்தில் நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெறுகிறது. இந்தபடத்தின் முதல்பார்வையை சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். DINASUVADU
நடிகை நித்யா மேனன் கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து அதன் பின்னே அப்படத்திற்கு ஒப்புக்கொள்ளும் நபராவார். சமீபத்தில் இவர் ‘மெர்சல்’ படத்தில் விஜயுடன் நடித்து நல்ல மதிப்பினையும் மக்களிடத்தில் பெற்றார். இப்படிப்பட்ட இவர் தற்போது பல நடிகைகள் நடிக்க மறுத்த ஓர் கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்து வருகிறாராம். நடிகர் நானி தயாரிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நித்யா மேனன், காஜல் அகர்வால், ரெஜினா ஆகியோர் நடிக்கும் படம் ‘அவே’. இப்படத்தில் போதைக்கு அடிமையாகவுள்ள பெண்ணாக நடிகை ரெஜினா நடித்துள்ளார். […]