நிதிஷ் குமார் : பீகார் முன்னாள் முதலமைச்சரான நிதிஷ் குமார் அவர்களின் ஐக்கிய ஜனதா கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் அவரை இந்திய கூட்டணி தலைவர்கள் கூட்டணிக்குள் இழுக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள எம்பிக்கள் 14 இடங்களை கைப்பற்றி உள்ளனர். இதன் காரணமாக நிதிஷ் குமாருக்கு துணை பிரதமர் பதிவையை வழங்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் இன்று பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார். பின்னர் கூட்டணியில் இருந்து விலகி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து முதல்வராக தொடர்ந்து வந்தார். […]
நேற்று பீகார் சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், பெண்கள் படிப்பதன் மூலம் மக்கள்தொகையை கட்டுப்படுத்த முடியும். தற்போது பீகார் பெண்களிடம் கல்வியறிவு அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு தற்போது உள்ள பெண்களிடம் பாலியல் குறித்த விழிப்புணர்வு உள்ளது. படித்த பெண் திருமணம் செய்யும்போது போது கருவுறுதலை தடுப்பதற்கான வழிகளை கணவருக்குசொல்லி கொடுக்க முடியும். இதற்கு முன்பு பீகாரில் குழந்தை பிறப்பு 4.3 சதவீதமாக இருந்தது. ஆனால் இப்போது 2.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு பெண்களின் கல்வியறிவு […]
பீகாரில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முக்கிய தலைவர்கள் இன்று களத்தில் உள்ளனர். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் பா.ஜனதா கூட்டணி ஆட்சி முடிவடைய உள்ளதால் அம்மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்ட தேர்தல் அக்., 28ந் தேதி நடந்து முடிந்தது. 2ம் கட்ட தேர்தல், இன்று நடைபெறுகிறது.2ம்கட்ட தேர்தலுக்காக கடந்த சில நாட்களாகவே சூறாவளி பிரசாரத்தினை கட்சிகள் நடத்தி வந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையுடன் […]
பிகாரில் மின்னல் தாக்கிய விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்தார். பீகார் மாநிலத்தின் கடந்த சில நாட்களாக மின்னல் தாக்கி வருகிறது. இதற்க்கு முன் அம்மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் பர் உயிரிழந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து, இன்று அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதால், அங்கு இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், மின்னல் தாக்கி […]