இந்திய கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று வரலாற்றில் முதல் முறையாக உலகின் மதிப்புமிக்க கார் நிறுவன பிராண்டுக்கான டாப்-10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. BrandZ என்ற தனியார் அமைப்பு ஒன்று உலகாவிய அளவில் பல்வேறு நிறுவனங்களை அலசி ஆராய்ந்து பிராண்டிங் தொடர்பான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. தற்போது உலகின் மதிப்புமிக்க ஆட்டோமொபைல் பிராண்டுக்கான டாப்-10 பட்டியலை BrandZ வெளியிட்டுள்ளது. இதில் முதல் முறையாக இந்திய நிறுவனம் ஒன்று இடம்பெற்றுள்ளது. BrandZ வெளியிட்டுள்ள உலகின் மதிப்புமிக்க கார் பிராண்டுக்கான டாப்-10 […]
நிசான் நிறுவனம் இந்தியாவில் நிரந்தர இடத்தை பிடிக்க ஒரு முயற்சியாக மின்சார கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது . ஏற்கனவே லீஃப் என்ற மின்சாரக் காரை தயாரித்திருந்த நிஸ்ஸான் நிறுவனம், அதை இந்தியாவில் விற்பனை செய்வதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்தது. இந்த நிலையில், 7 லட்சம் ரூபாயில் இருந்து ஆரம்பாகும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை அந்த நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நிஸ்ஸான் நிறுவன அதிகாரிகள் […]
தமிழகத்தில் நிஸான் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வரிச்சலுகை, ஊக்கத்தொகை தருவதாக உறுதி அளித்தபடி தமிழகஅரசு தராததால், ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு தமிழக அரசின் மீதான புகார் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.மேலும் நிஸான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையானது தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தால் தமிழக தொழில்துறை சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.