டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதலமைச்சர் முக ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல். டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழ்நாட்டு முக்குதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சகத்தில் சந்தித்திருந்தார், இந்த சந்திப்பின் போது, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி நிலவை தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்த நிலையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடி நிலுவை தொகையை விடுவிக்க வேண்டும் […]
இன்று மாலை 3 மணிக்கு பத்திரிக்கையாளர்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பிற்பகல் 3 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். கொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல மாநிலங்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளனர். இதனால், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்திக்கும் மத்தியில் நிதி அமைச்சர் சில பொருளாதார நிவாரண அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மத்திய நிதியமைச்சர் தலைமையில் 44 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய வரிவிலக்கு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில் இன்று 44வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிதியமைச்சர்கள் மத்திய மாநில அரசின் முக்கிய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சைக்கு […]
சிறிய சேமிப்பு திட்டகளுக்கு வட்டி குறைப்பு அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக நிர்மலா சீதாராமன் ட்வீட். மத்திய அரசு பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் மற்றும் முதலீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. உதாரணமாக மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், சுகன்யா சம்ரிதி திட்டம், கிஷான் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்புப் பத்திரங்கள், தபால் அலுவலக சேமிப்பு என பல திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு திரும்பப் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக் கொண்டார்.
வாழ்க்கையில் உங்கள் கனவு என்னவாக இருந்தது என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், விதிதான் தன்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்து இருப்பதாக தெரிவித்துள்ளார். நேற்று பெங்களூருவில் நடைபெற்ற தொழிற்சாலைகள் மற்றும் வணிக சேம்பர் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நிர்மலா சீதாராமனிடம் நீங்கள் இந்த நிலைக்கு வருவதற்கான உந்துதல் யாரிடமிருந்து கிடைத்தது எனவும், உங்களது சிறுவயது […]
பெட்ரோல் டீசலின் விலை உயர்ந்துள்ளது எனக்கும் தர்மசங்கடமாக தான் உள்ளது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று சென்னை தியாகராய நகரில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு எனக்கு தர்மசங்கடமாக தான் உள்ளது எனக் கூறியுள்ளார். மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விலை […]
பாரதிய ஜனதாவிற்கு என்று தமிழகத்தில் ஒரு எம்பியும் இல்லாவிட்டாலும் பட்ஜெட்டில் குறையில்லாமல் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு ஒரு எம்பி கூட இல்லை. இருந்தாலும், தமிழகத்திற்கு எவ்வித குறையும் இல்லாமல் பட்ஜெட்டில் துறைவாரியாக நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 2014 -இல் […]
டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்திற்கு, மெட்ரோ ரயில் மற்றும் சாலை பணிகளுக்காக பட்ஜெட் தாக்கலில் நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். இதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று டெல்லியில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் […]
மத்திய பட்ஜெட் தாக்கல் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இன்று நிதியமைச்சகத்தில் அல்வா நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மக்களவையில் 2021- 22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் குறித்த விளக்க உரை இரண்டு அமர்வுகளில் நடைபெறும் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது, ஜன. 29 முதல் பிப்ரவரி 15 வரை மற்றும் மார்ச் 8 முதல் ஏப்ரல் […]
வங்கிகள் கடன் வழங்க மறுப்பு தெரிவித்தால் புகார் அளிக்கலாம். கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், சிறு குறு தொழில் செய்யும் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்திய வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பின், நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான மேம்பாட்டுக்காகவே அவசர கால கடனுதவி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியதாகவும், அத்திட்டத்தின் கீழ் வங்கிகள் […]
நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், நாட்டில் கிடைக்காத அத்தியாவசிய மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தவறல்ல என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனாவை இந்தியா அதிகம் நம்பியிருப்பதைக் குறைத்து, உற்பத்தியை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை வழங்கவும் உதவும் பொருட்களை இறக்குமதி செய்வதில் தவறில்லை என தெரிவித்துள்ளார். களிமண்ணிலிருந்து விநாயகர் சிலைகளை கூட நம்மால் செய்ய முடியாத சூழ்நிலை ஏன் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ள சீதாராமன், […]
கொரோனா நிவாரண நிதியாக பிரதமர் அளித்துள்ள 20 லட்சம் கோடி பணத்தில் விவசாயிகளுக்கு எவ்வளவு அளிக்கப்படும் மற்றும் எந்தெந்த விவசாய துறைகளுக்கு அளிக்கப்படும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரை தனது கோர முகத்தை தான் காண்பித்து வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸால் பொருளாத சிக்கல் அதிகம் ஏற்பட்டுள்ளதால் பிரதமர் மோடி மக்களுக்கு நிவாரண நிதியாக 20 லட்சம் கோடி பணத்தை கொடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். அதன் படி இந்த பணம் […]
மீன்வளத்துறையை மேம்படுத்த ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த அறிவிப்பில், மீன்வளத்துறையை மேம்படுத்துவதற்காக பிரதமரின் மீன்வளத் திட்டத்தில் ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், […]
பிரதமர் மோடியின் ரூ.20 லட்சம் கோடி திட்டதிற்கு ஐ.நா. பொருளாதார நிபுணர்கள் பாராட்டு. பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவ்ர்கள் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், உலகளாவிய பொருளாதார கண்காணிப்பு பிரிவு தலைவர் ஹமிது ரஷித் இதுகுறித்து கூறுகையில், ‘இந்தியாவின் அறிவிப்பு, மிகவும் வரவேற்புக்குரிய நிகழ்வு. வளரும் நாடுகளின் […]
12 ஆயிரம் சுய உதவிக்குழுக்கள் மூலம் 3 கோடி முகக்கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். […]
கடந்த சில மாதங்களாக இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது, சீனா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. மேலும், இந்தியாவிலும், 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர் நிதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மருத்துவ விளம்பரங்கள், பாதுகாப்பு நடவடிக்கைகள், சுகாதாரம், பேரழிவு நிவாரணம் ஆகியவற்றிற்கு இந்த நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது இந்திய பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்கிறது. இதனையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், அவ்வப்போது சில இந்திய பொருளாதாரம் குறித்து சில தகவல்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதால், இதனை போக்குவதற்காக சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். அந்த வகையில், தற்போது நஷ்டத்திலிருக்கும், ஏர் இந்தியா நிறுவனம் மற்றும் பாரத் பெற்றோலியம் நிறுவனம் ஆகிய இரண்டையும் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்க […]
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு இந்தி திப்பு செய்வதில்லை என்றும், தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம் என்றும், இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு உடனடியாக வருவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக் கூடியது என்றும், நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இன்று புதிய அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் அமைச்சர்கள் அறிக்கைகளை சூட்கேசில் எடுத்து வருவது தான் வழக்கம். ஆனால், தற்போது உள்ள மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தேசிய சின்னத்துடன் கூடிய சிவப்பு நிற துணிப்பையில் அறிக்கையை எடுத்து வந்துள்ளார். இவரது இந்த செயல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]