குற்றவாளிகளை தூக்கிலிடப்படும் இறுதி தேதியாக மார்ச் 20 இருக்கும் என நம்புகிறேன் என நிர்பயாவின் தாய் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனிடையே மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளை மார்ச் 20ம் தேதி தூக்கில் போடுவது உறுதியானது.
டெல்லியில் பாட்டியாலா நீதிமன்றம் வளாகத்தில் நிர்பயாவின் தாயார், தனது மகளின் இறப்பின் நீதிக்காக, தான் 7 ஆண்டுகளாக போராடிக் வருவதாகவும், குற்றவாளிகள் நடத்தும் நாடகத்தை, நீதிமன்றம் புரிந்துகொள்ள வேண்டும், எனவும் கூறி, கண்ணீர் விட்டு அழுகை. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பாலியல் வன்கொடுமை செய்து செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு […]