தலைநகர் டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் சிங் ஆகிய 4 பேருக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இது குறித்த இறுதி தீர்ப்பு இன்று வர உள்ளது. இந்த கொடூர குற்றவாளிகள் தனித்தனியாக கருணை மனு, சீராய்வு மனு தாக்கல் செய்து வருவதை தொடர்ந்து, இவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறது. […]