நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்கு தடை விதித்தும், அப்பகுதியில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்நிலையில், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அவர் அகற்றவும், விதிமுறைகளை மீறி புதிய […]
நீலகிரியில் 5 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம். தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கடந்த 5 நாட்களாக நீலகிரியில், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கொடநாடு, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, அணைகளில் நீர்மட்டத்தின் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா, பேரிடர் அபாயம் உள்ள 456 இடங்கள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முகாம்களில் தங்க […]
நீலகிரியில் கனமழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு. தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் மலைச்சரிவு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி,தேனி,கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அப்பர் (மேல்) பவானியில் 31 செ.மீ., அவலாஞ்சியில் 22 செ.மீ […]
தென்மேற்கு பருவ மழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் கர்நாடகா மற்றும் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது.தமிழகத்தை பொறுத்தவரை கோவை,நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்தது. நீலகியில் கனமழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் அவற்றை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.பல்லாயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நீலகிரியில் மழை வெள்ள பாதிப்புகளை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்வையிட்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீலகிரியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இழப்பீடு வழங்க […]
நீலகிரியில் தொடர்ந்து நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இன்றும் நீலகிரியில் ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருவதால், அங்கு உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கும் தொடர்ந்து 4-வது நாளாக அம்மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் பெருகி இருக்கும் குதிரைகளை எளிதில் அடையாளம் காண்பதற்கு அவற்றின் கழுத்தில் சிப் ஒன்று பொறுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தின் சுற்றுலா தளங்களில் முக்கியமாக இருக்கு உதகையில், குதிரைகள் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில், சர்வேதச கால்நடை சேவை அமைப்பு முதல் கட்டமாக குதிரைகளை அடையாளம் காண அவற்றின் காலத்தில் சிப் […]