நீலகிரி மாவட்டத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ரெட் அலர்ட் தொடர்கிறது. அடுத்த 24 மணிநேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் தொடர்கிறது. மேலும் கோவை, தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு […]
நீலகிரியில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் காலம், நவம்பர் மாதமே தொடங்கியுள்ளது. அங்கே உள்ள பகுதிகளில் உறை பனி பொழிவு காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கின்றது. சாலையில் செல்லும் வாகனங்களின் மேல் பனி பொழிந்துள்ளதால் அவை ஐஸ் கட்டிகளாக தெரிகின்றன. இந்த உறைபனி இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தினமும் காலை 11 மணி வரை பனிப்பொழிவு நீடிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்களை கணக்கெடுக்கும் பணி இன்று துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் முதுமலை, கார்குடி, தெப்பக்காடு, மசினக்குடி உள்ளிட்ட சரகங்கள் அடங்கிய வனப்பகுதிகளில் இன்று காலை வன உயிரினங்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. 29 பகுதிகளாக நடைபெறும் இந்தப் பணிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு பகுதிகளிலும் மூன்று வனத்துறை பணியாளர்கள் அடங்கிய குழுக்கள் களப்பணியில் ஈடுபடுகின்றனர். விலங்குகளின் கால் தடங்கள், எச்சம், மரங்களில் காணப்படும் அடையாளங்கள், […]