குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுபோன்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக […]
அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலி மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் போட்டியிடுவதாக […]
ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுக்கு வானமே எல்லை என்று கூறியுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நவ்தேஜ் சிங் சர்னா ((Navtej Singh Sarna))அளித்த விருந்தில் பங்கேற்றுப் பேசிய நிக்கி ஹாலே, பொருளாதார மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்களை பிரதமர் மோடி தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பாராட்டுத் தெரிவித்தார். இதேபோன்ற செயல்பாடுகளை அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் நிர்வாகமும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, இரண்டு ஜனநாயகங்களும் இணைந்து பணியாற்றுவதற்கான பொது மதிப்பீடுகளை பெற்றிப்பதாகவும் […]
அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் மற்றும் நிக்கி ஹாலே இடையே முறையற்ற தொடர்பு இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து அது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது . இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹாலே தெற்குக் கரோலினா மாநில ஆளுநராகவும் ஏற்கெனவே பணியாற்றியவர். இந்நிலையில் அதிபர் டிரம்புடன் நிக்கி ஹாலேக்கு அந்தரங்கத் தொடர்பு உள்ளதாக மைக்கேல் ஒல்ஃப் என்பவர் தனது ஃபயர் அண்டு ஃபியூரி என்னும் நூலில் தெரிவித்துள்ளார். நிக்கி ஹாலே பல நேரங்களில் வெள்ளை மாளிகையில் இருந்ததாகவும், […]