இரவிலும், ஞாயிற்றுக்கிழமையும் கட்டுப்பாடு இருப்பதால் மக்களுக்கும் அரசுக்கும் பொருளாதார பாதிப்புகள் பெரிதாக இருக்காது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் ஆகியவை போதுமானதாவையா? என பல்வேறு கேள்வி எழுந்துள்ளது. எனினும் இதற்கு அரசு அதிகாரிகள் தரப்பில் சில விளக்கங்கள் கூறப்படுகிறது. மக்கள் மத்தியில் கொரோனா குறித்த எச்சரிக்கை உணர்வு ஏற்படுத்தவும், நிலைமை தற்போது இயல்பாக இல்லை என உணர்த்துவதற்கு இந்த நடவடிக்கைகள் உதவும் […]
இரவு ஊரடங்கு மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள். அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், தற்போது பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 20-ஆம் தேதி இரவு 10 மணியிலிருந்து இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை அடுத்து சென்னையில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் […]
மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும்போது மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்திய அரசு விமான சேவையை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு விழா வருவதையொட்டி, […]
குஜராத் மாநிலத்தில் அகமதாபாத்தை தொடர்ந்து சூரத் , ராஜ்கோட்,வடோதராவில் இன்று முதல் ஒவ்வொரு நாளும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் குஜராத் மாநிலத்தில் புதிதாக 1,420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,94,402-ஆக உயர்ந்துள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த வியாழக்கிழமை, அகமதாபாத்தில் இன்று இரவு 9 மணி […]
மத்தியப் பிரதேசத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அதிரடி உத்தரவு விதிக்கப்பட உள்ளது. அதன்படி, இன்று முதல் இந்தூர், போபால், குவாலியர், விடிஷா, மற்றும் ரத்லம் ஆகிய 5 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் நேற்று அறிவித்தார். இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விதிக்கப்படும் என்றும் […]