ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறிய கூடிய டிஸ்போசபிள் வேப்ஸ்களின் இறக்குமதியை ஜனவரியிலிருந்து தடை செய்ய ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார். வளரும் இளைஞர்களிடையே இந்த சாதனங்கள் மிகவும் பிரபலமடைவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புகையிலையில் அதிகளவில் காணப்படும் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் நிரப்பப்பட்ட இந்த வேப்ஸ், ஒரு வகை இ-சிகரெட் ஆகும். சாதாரண புகையிலை போல வேப்ஸ்களுக்கும் பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த நிலையில் […]