நிகோபார் தீவில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 1.49 மணியளவில் நிகோபார் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 150 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் நிலநடுக்க பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நேற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் […]
அந்தமான்-நிக்கோபாரில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்தமான்-நிக்கோபாரில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7.21 மணியளவில் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதனை அடுத்து 9.12 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இதன் பின்னர் 9.13 மணி அளவிலும் […]
அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 1943ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்து இந்திய சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். இதன் 75ஆம் ஆண்டு நிறைவை கோகாலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளார். கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக, இன்று […]