Tamil News Today Live : பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த வாரம் நடந்த வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் 17 இடங்களில் என்ஐஏ (NIA) அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சியினர் தங்கள் ஆதரவு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு பல்வேறு செய்திகளை உடனுக்குடன் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
இன்று காலை முதல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதிராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து காணலாம்….
நாட்டில் சட்டவிரோத சர்வதேச நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (NIA) அவ்வப்போது சந்தேகத்தின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவது வழக்கம். தமிழகத்திலும் அவ்வப்போது இந்த சோதனைகள் தொடர்ந்து வருகிறது. அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..! இன்று அதிகாலை முதலே சென்னை, கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து […]
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கேரளாவில் 56 இடங்களில் சமீபத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு (பிஎஃப்ஐ) தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. தடைசெய்யப்பட்ட PFI இன் உறுப்பினர்கள் இன்னும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் நிதி திரட்டவும் சேகரிக்கவும் முயற்சித்து வருகின்றனர் என்று பிஎஃப்ஐ சார்ந்த உறவினர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களின் வீடுகளில் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், ஆலப்புழா, கொல்லம் மற்றும் எர்ணாகுளம் […]
இலங்கை குண்டுவெடிப்புடன் ஒருவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் பயங்கரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பு கோவையில் 7 இடங்களில் சோதனை நடத்தியது.இந்த சோதனை முடிந்த பின், இலங்கை குண்டுவெடிப்புடன் முகமது அசாருதீன் என்பவருக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 14 செல்போன்கள்,29 சிம்கார்டுகள்,10 பென் டிரைவ், 3 லேப்டாப், 6 மெமரி கார்டு,4 ஹார்டு டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]