என்ஐஏ சோதனை : கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் தஞ்சையில் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். தஞ்சை திருபுவனத்தை சேர்ந்த ராமலிங்கம் மதமாற்றத்தை எதிர்த்து செயல்பட்டதாகவும், அதன் பெயரில் இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை விசாரணையில் கூறப்பட்டது. மேலும், இந்த வழக்கில் 18 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு, அதில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். 5 பேர் தற்போது வரையில் தேடப்படும் குற்றவாளிகளாக உள்ளனர். இந்த […]
இன்று காலை முதல் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை வடபழனியில் இருந்து ஹைதிராபாத் நோக்கி சென்ற சுற்றுலா பேருந்தின் மீது லாரி மோதிய விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இவ்வாறு பல்வேறு நிகழ்வுகளை அடுத்தடுத்து காணலாம்….
நாட்டில் சட்டவிரோத சர்வதேச நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வரும் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ (NIA) அவ்வப்போது சந்தேகத்தின் பெயரில் நாட்டின் பல்வேறு இடங்களில் சோதனை செய்து வருவது வழக்கம். தமிழகத்திலும் அவ்வப்போது இந்த சோதனைகள் தொடர்ந்து வருகிறது. அலுவலகம் திறந்த பாஜக.! சீல் வைத்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் ..! இன்று அதிகாலை முதலே சென்னை, கோவை, விருதுநகர், மதுரை, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து […]
சென்னை கொளத்தூரில் குறும்பட இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். இன்று திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம்! மாவோயிஸ்ட் வழக்கு தொடர்பாக ஹைதராபாத் என்.ஐ.ஏ. ( NIA) அதிகாரிகள் இயக்குனர் முகில் சந்திரா வீட்டில் சோதனை நடத்துகிறது. ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகில் சந்திரா சென்னை கொளத்தூரில் […]
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, கோவை, சென்னை, திருச்சி, சிவகங்கை மற்றும் தென்காசி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில், திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன், வகங்கையில் தென்னகம் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரதாப், தென்காசியில் […]
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (என்.ஐ.ஏ) சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவையில் 2 இடங்கள், சென்னை, திருச்சி, சிவகங்கை மற்றும் தென்காசியில் தலா ஒரு இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில், திருச்சி சண்முகா நகரில் உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபோன்று, சிவகங்கையில் […]